ஹெக்டேருக்கு 8,000 கிலோ நிலக்கடலை அறுவடை செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறைவாசிகள் சாதனை புரிந்துள்ளனர். இது வழக்கமான மகசூலை விட இருமடங்கு அதிகம்.பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிரியக்கம் மூலம் உற்பத்தி செய்த `டிஜி 37 ஏ’ என்ற வீரிய ரக நிலக்கடலை பரிசோதனை அடிப்படையில், சிறை வளாகத்திலுள்ள 2.25 ஹெக்டேரில் 15.3.2014-ம் தேதி விதைக்கப்பட்டது. வியாழக்கிழமை அறுவடைப் பணியில் சிறைவாசிகள் ஈடுபட்டனர். வழக்கமாக நிலக்கடலை செடியில் 25 முதல் 30 வரை காய்கள் காய்க்கும். இந்த வீரியவகை நிலக்கடலை பயிரில் மூடுக்கு 60 காய்கள் விளைந்திருந்தன.அறுவடைத் திருவிழாவில் பங்கேற்ற, மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலைய மூத்த விஞ்ஞானி ஜெ.டேனியல் செல்லப்பா கூறியதாவது:கடந்த 2004-ம் ஆண்டில் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்ட `டிஜி 37 ஏ’ நிலக்கடலை பயிர் நாடு முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. விதை குருத்து அழுகல் மற்றும் வளைய தேமல் நோய் எதிர்ப்பு கொண்ட இந்த ரகம், அதிக விளைச்சல் தரக்கூடியது. வறட்சியைத் தாங்கக் கூடியது. எல்லா பருவத்துக்கும் ஏற்ற ரகம். தோட்டக்கால்களில் பயிரிடும்போது 100 நாள்களிலும், மானாவாரி நிலங்களில் 110 நாள்களிலும் அறுவடை செய்யலாம்.எண்ணெய் திறன் அதிகம்லேசான ரோஸ் நிறத்துடன் கூடிய திரட்சியான கொட்டைகள், 48 சதவிகிதம் எண்ணெய் திறனும், 23 சதவிகிதம் புரதச் சத்தும் உடையது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ், இவற்றை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் வந்தால், அவர்களுக்கு அந்த விதைகளை வழங்குகிறோம். இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று, வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும் என்றார் அவர்.சிறைவாசிகளின் உழைப்புமத்திய சிறை கண்காணிப்பாளர் ரா.கனகராஜ் கூறியதாவது:இத்தகைய முயற்சியில் சிறைப் பணியாளர்களும், சிறைவாசிகளும் ஈடுபட்டது பாராட்டுக்குரியது. தரிசு நிலத்தை பண்படுத்தி, உழைப்பை செலுத்தி 2 மடங்கு மகசூல் பெற்றிருக்கிறார்கள். இங்கு அறுவடை செய்யப்படும் நிலக்கடலை அனைத்தும் விதையாகவே பயன்படுத்த உள்ளோம். கோவை, சேலம், திருச்சி, சென்னை மத்திய சிறைகளில், இவை பயிரிடப்படும்.சிறைத்துறை தலைவர் அனுமதி அளித்தால், திருநெல்வேலி மாவட்ட உள்ளூர் விவசாயிகளுக்கும் விதையாக அளிக்க இருக்கிறோம். சிறைவாசிகள், சமூகத்துக்கு ஆற்றும் பணியாகவே இத்தகைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள், என்றார் அவர்.விவசாயி ஆச்சர்யம்நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதாபுரம் பகுதி விவசாயி டி.செல்வராஜ், `எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 20 முதல் 30 மூட்டை நிலக்கடலைதான் (1 மூட்டை 36 கிலோ) கிடைக்கும். இங்கு ஏக்கருக்கு 90 மூட்டை மகசூல் கிடைத்திருக்கிறது. நிலக்கடலை பருப்பும் திரட்சியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.சாதாரண விவசாயிக்கு புதிய ரகம் கிடைக்குமா?இவ்விழாவில் பங்கேற்ற பாளையங்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மகாலிங்கம் மற்றும் வேளாண் அலுவலர் மாரியப்பன் ஆகியோர் `திருநெல்வேலி மாவட்டத்தில் ஹெக்டேருக்கு சராசரியாக ஹெக்டேருக்கு 2 முதல் 2.5 டன் தரக்கூடிய நிலக்கடலை உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த வீரியவகை நிலக்கடலை ஹெக்டேருக்கு 5 மெட்ரிக் டன் மகசூல் தந்துள்ளது. இதனால், ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் வரும்’ என ஆச்சர்யம் தெரிவித்தனர்.தண்ணீர் பற்றாக்குறையால் தென் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மட்டத்திலான அதிகாரிகள், இத்தகைய வீரிய வகை பயிர் ரகங்களை, விவசாயிகள் கைக்கு எட்டச் செய்வது அவசியம்.
Friday, 27 June 2014
Wednesday, 25 June 2014
வாழைக்கு வருகிறது வேட்டு?
அந்த இன்னொரு பழம் எங்கேடா...?...அதாண்ணே இது...!- தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை. இப்படி நகைச்சுவைக் காட்சியின் முக்கிய அம்சமாக இருந்த நம்முடைய வாழைப்பழம், பன்னாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகப் போகிறது.எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் - என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை.முக்கனிகளில் ஒன்றான இதில் பூவன், நாடன், பேயன், செவ்வாழை, கதலி - எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் சுவை மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு மருத்துவக் குணமும் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.வளத்தின் அடையாளம்சங்கத் தமிழ் பாடல்கள் வாழையை, வளமான நிலப்பகுதியின் குறியீடாக அடையாளப்படுத்துகின்றன. மலையும் காடும் வயலும் உள்ள நிலப்பரப்புகள் யாவும் சுவை தரும் வாழையின் வாழிடமாய் இருந்திருக்கின்றன. ’மலைவாழை அல்லவோ கல்வி; அதை வாயாற உண்ணுவாய் போ என் புதல்வி’ எனக் கல்வியின் மேன்மையைச் சுட்டிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியிருக்கிறார்.அறிஞர் அண்ணாவின் ‘செவ்வாழை’ சிறுகதை, வாழையை மையமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பு. ‘வாழையடி வாழையாக' எனும் வாழ்த்து வரிகள் இறப்பிலா வாழ்க்கையின் தொடர் இயக்கத்தைக் குறிக்கின்றன.ஏழைகளுக்குப் பசியை ஆற்றும் இந்த எளிய உணவு, இப்போது பணக்கார மேன்மக்களுக்கு அஜீரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்.இந்திய இளைஞர்களின் முன்மாதிரியாக நம்பப்படுபவர். உலகின் மிகப் பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தின் தலைவருக்கும் வாழைப்பழத்துக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது.மரபணு மாற்றப் பயிர்கள்இது மரபணு மாற்றப் பயிர்களின் காலம். ’துள்ளும் தக்காளி’, 'துவளாத கத்தரிக்காய்’ எனக் குரலெழுப்பி வந்து கொண்டிருக்கின்றன மரபணு மாற்ற உணவுப் பயிர்கள். மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்கள், தங்கள் காப்புரிமை விதைகளை ஏழை நாடுகளில் விற்றுப் பெருத்துக் கொண்டிருக்கின்றன.இந்த நிறுவனங்கள் உணவுப் பயிர்களின் மீது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருவதா,ல், கிட்டத்தட்டத் தங்களைக் கடவுளாகவே கருத ஆரம்பித்துவிட்டன போலும்உயிர்களை உருவாக்குகிறோம்..உணவை உருவாக்குகிறோம்..ஊட்டத்தை உருவாக்குகிறோம். - என்ற முழக்கத்தை அவை முன்வைக்கின்றன.திருடப்படும் சொத்துவானம் பார்த்த பூமியில் விளைந்து நமக்கும் நம் குழந்தைகளுக்கும் ஊட்டம் கொடுத்துக்கொண்டிருந்த புன்செய் பயிர்களை, இப்போது தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. இயற்கை வழி விளைவித்த உணவுப் பொருட்கள் விற்கப்படும் கடைகளை ஒரு நகரத்தில் ஒன்றிரண்டு மட்டுமே காண முடிகிறது.கம்பங்கூழ் அருந்திப் பழக்கப்படாத வீடுகளில் எல்லாம் தவறாமல் ஹார்லிக்ஸ் புட்டிகள் இருக்கின்றன. சோளம், ராகி, வரகு, சாமையை மறந்துவிட்டுக் காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிக்கிறார்கள் தமிழ்மக்கள்.விதைத் தானியமே எடுத்துவைக்க முடியாத விதைகளை மட்டுமே விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். ஒரு விவசாயி தனது அடுத்த விதைப்புக்கு அவர்களை மட்டுமே நாடி கையேந்தி நிற்க வேண்டிய நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.மரபணு மாற்ற வாழைஇந்நிலையில், பில்கேட்ஸ் எடுத்துள்ள சமீபத்திய முயற்சி நமது விவசாயிகளைத் திடுக்கிட வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியப் பயிர் விஞ்ஞானி ஜேம்ஸ் டேல் என்பவருடன் சேர்ந்து புதிய ஆராய்ச்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.‘வாழைப்பழம் ஒரு முக்கிய உணவு மட்டுமல்ல; மருந்தும்கூட-’ என்பதே அந்த அரிய கண்டுபிடிப்பு. இந்த ’கண்டுபிடிப்பின்’ பயனாக இந்தியா, ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் குழந்தை பிறப்பு மரணங்களைத் தடுக்க முடியுமாம்.மேலும், பிள்ளை பெறும் தாய்மார்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் ரத்தச் சோகை நோயைத் தவிர்க்கவும் முடியுமாம். தான் கண்டுபிடித்த புதிய வாழையில் இதற்கான மருத்துவக் குணங்களைப் பொதிந்து வைத்திருப்பதாக மார்தட்டுகிறார் பில் கேட்ஸ்.
மான்சாண்டோவின் மறுவடிவம்‘
மான்சாண்டோ நிறுவனம் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததோ, அதே திட்டத்தின் மறுவடிவம்தான் இது. நமது வாழைச் செல்வத்தை முழுமையாக அபகரிப்பது மட்டுமே பில்கேட்ஸின் நோக்கம்’-என எச்சரிக்கை விடுக்கிறார் புகழ்பெற்ற பயிர் விஞ்ஞானியும் சூழலியல் போராளியுமான டாக்டர் வந்தனா சிவா. மான்சாண்டோவின் உணவுப் பயிர் இருப்பில் 5 லட்சம் பங்குகளின் மீது பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.நமது வளமார்ந்த பல்லுயிர் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி, நுகர்வின் மீது தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ரகசியத் திட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.ஏற்கெனவே ஆந்திர, மராட்டிய மாநிலங்களின் பருத்தி விவசாயிகளுக்கு மலட்டு விதைகளையும், மரணத்தையும் பரிசாய்த் தந்தவை இந்த நிறுவனங்கள்தான். எனவே, பணம் படைத்தவர்கள் விடுத்துள்ள இந்த உணவு ஆதிக்கப் போரை தீரத்துடன் நாம் எதிர்கொள்ள வேண்டும்.- அவைநாயகன், கவிஞர், தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com
மான்சாண்டோவின் மறுவடிவம்‘
மான்சாண்டோ நிறுவனம் எவ்வாறு நமது பருத்தி விவசாயத்தைத் திட்டமிட்டு அழித்ததோ, அதே திட்டத்தின் மறுவடிவம்தான் இது. நமது வாழைச் செல்வத்தை முழுமையாக அபகரிப்பது மட்டுமே பில்கேட்ஸின் நோக்கம்’-என எச்சரிக்கை விடுக்கிறார் புகழ்பெற்ற பயிர் விஞ்ஞானியும் சூழலியல் போராளியுமான டாக்டர் வந்தனா சிவா. மான்சாண்டோவின் உணவுப் பயிர் இருப்பில் 5 லட்சம் பங்குகளின் மீது பில்கேட்ஸ் முதலீடு செய்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.நமது வளமார்ந்த பல்லுயிர் சூழலைச் சூறையாடுவதும் உணவு உற்பத்தி, நுகர்வின் மீது தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பல பன்னாட்டு நிறுவனங்களின் ரகசியத் திட்டமாக இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.ஏற்கெனவே ஆந்திர, மராட்டிய மாநிலங்களின் பருத்தி விவசாயிகளுக்கு மலட்டு விதைகளையும், மரணத்தையும் பரிசாய்த் தந்தவை இந்த நிறுவனங்கள்தான். எனவே, பணம் படைத்தவர்கள் விடுத்துள்ள இந்த உணவு ஆதிக்கப் போரை தீரத்துடன் நாம் எதிர்கொள்ள வேண்டும்.- அவைநாயகன், கவிஞர், தொடர்புக்கு: avainayagan.osai@gmail.com
Subscribe to:
Comments (Atom)