கழிவு நீரிலிருந்து மின் உற்பத்தி : நமது நாட்டிலுள்ள நகரங்களில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.உயர்வேக எரிவாயு நுட்பம்: இந்தியாவில் 1950 முதல் வளியற்ற நுண்ணுயிர்கள் மூலம் உயர்வேக எரிவாயு உருவாக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.தொழில்நுட்பத்தின் செயல்பாடு : உயர்வேக கூட்டு கலன் என்பது மேல் செல்லும் வளியற்ற திடப்படுக்கை அடைப்புடன் நிலையினை நெகிழி கலன்களின் கூட்டு கலவையாகும். இதன் மூலம் வளியற்ற பகுதியில் வாடும் நுண்ணுயிர்கள் குறிப்பாக நுண்ணுயிர்கள், உயிர்ச்சுருள் அளவில் வரை மிகவும் ஏதுவாகின்றது. இத்தகைய வட்டு வளியற்ற திடப்படுக்கை அமைப்பு பல்வேறு தொழிற்சாலை நீர்கழிவுகள் நன்கு மாசு நீக்கு தன்மை பெற்றுள்ளன.""தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு : வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள உயிர் சக்தி துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக எளிய முறையில் அமைக்க கூடிய உயர்வேக எரிவாயு கலன் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.இந்த கலன் காகித ஆலைகள், சவ்வரிசி தொழிற்சாலைகள், பால்பதனிடும் பால்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிக்க மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. இந்த தொழிற்சாலைகளை சுமார் 70 - 90 சதம் வரை கழிவு நீரிலிருந்து கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதுடன் 60 -70 சதம் உள்ள மீதேன் எரிவாயும் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிற்சாலைகளில் ஆற்றல் தேவையில் 40 முதல் 100 சதம் வரை பூர்த்தி செய்கின்றன.தமிழ்நாட்டில் சுமார் 700க்கும் மேற்பட்ட சவ்வரிசி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இவைகளில் சுமார் 50 தொழிற்சாலைகளை மட்டும் பெரிய அளவிலான எரிவாயு கலன்களைக் கொண்டு மீத்தேன் வாயு உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் சுமார் 100 முதல் 150 தொழிற்சாலைகளில் மட்டும் திறந்தவெளி தொட்டிகளில் கழிவுநீர் சேமிக்கப்பட்டு மீத்தேன் வாயு சேகரிக்கும் கலன்கள் அமைந்துள்ளன. சில தொழிற்சாலைகள் கழிவு நீரினை மறு சுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்கின்றன.இந்த கலன்களின் மூலமாக சுத்திகரிக்கும் பொழுது கிடைக்கும் கழிவுநீரின் அளவிற்கேற்ப நாள் ஒன்றுக்கு 5 முதல் 2000 கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்து, 1 கிலோ வாட்ஸ் முதல் 250 கிலோ வாட்ஸ் வரை மின்உற்பத்தி செய்யலாம். இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவு நீரிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலைகளில் கழிவுநீர் வெளிப்பாடு பெரும் பிரச்னையாக இருப்பதால் இத்தொழில்நுட்பம் மூலம் நிவாரணம் பெற முடியும்.இவ்வாறு கழிவுநீரை சுத்திகரிக்கும் பொழுது, ஏற்கனவே மிகுந்த மின்சாரத்தை செலவழித்து இயக்கப்படும் சுத்திகரிப்பானின் இயக்கம் நிறுத்தப்படுவதால், அந்த மின்சாரத் தேவையும் தவிர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கலனில் தேங்கும் திடப்பொருளும் வெளியேற்றப்பட்டு சிறந்த இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.உயர்வேக எரிவாயு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் நகரக்கழிவு, பல்வேறு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளின் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்வதுடன் சிறந்த பலனாக எரிவாயு சக்தியைப் பெற்று மின்சாரமும் உற்பத்தி செய்ய முடிகின்றது. இத்தகைய தொழில்நுட்பம் கழிவு நீரில் மாசு நீக்கும் தொழில்நுட்பமாகவும், அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத தொழில்நுட்பமாகவும் விளைகிறது. எனவே இத்தகைய தொழில்நுட்பத்தினை எளிதில் உபயோகித்து சிறந்த பலனைப் பெற முடியும். தகவல் : முனைவர் சௌ.காமராஜ், உயிர்சக்தி துறை, வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 - 661 1276.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
Tuesday, 30 December 2014
இயற்கை வேளாண்மை ஒரு கண்ணோட்டம்
இயற்கை வேளாண்மையில் பூச்சி நோய் நிர்வாகம் : பூச்சி நோய்கள் தாக்காத இரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். சரியான விதைக்கும் பருவத்தில் விதைப்பதினால் பூச்சி, நோய் தாக்குதல் தவிர்க்கலாம். பயிர் சுழற்சி மற்றும் பல்வேறு மாற்றுப்பயிர்களை தேர்வு செய்வதன் மூலமும் பூச்சிகளின் தாக்குதலை குறைக்க முடியும். இனக்கவர்ச்சி பொறி மற்றும் இதர பூச்சிப்பொறிகளை வைத்தும் பூச்சிகளை கட்டப்படுத்தலாம். இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் பூச்சி, நோய் தாக்குதலை சமாளித்து வளரக்கூடியதாக உள்ளது. மேலும் மண் மூலமாக பரவும் நோய்களின் தாக்குதலும் இயற்கை வேளாண் சாகுபடி நிலங்களில் குறைவாகவே உள்ளது. இயற்கை வேளாண்மையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்: இயற்கை வேளாண்மையில் பல்வேறுவிதமான நன்மைகள் சுற்றுச்சூழலுக்கு கிடைக்கிறது. இயற்கை வேளாண்மை செய்யப்படும் நிலத்தில் உள்ள அங்ககப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் மண்வளம் பராமரிக்கப்பட்டு மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் அதிக அளவில் இருக்கும். இதனால் மண்ணின் அமைப்பு மேம்படுவதுடன் பயிர்ச்சத்துக்கள் நன்முறையில் பயிர்களுக்கு கிடைக்கிறது. சாதாரண சாகுபடி முறையினை விட இயற்கை வேளாண்மையில் நீர்வளம் மற்றும் நிலம் மாசுபடுதல் குறைவு. பல்வேறு விதமான பயிர்கள் , பயிர் மரபியல் வளங்கள் இயற்கை வேளாண்மையில் அதிகம் உள்ளன. இயற்கை வேளாண்மையினால் பறவைகள் மற்றும் சிறுபிராணிகளுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் தேவையான அளவில் கிடைக்கிறது. இயற்கை வேளாண்மையினால் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் இதர உயிரினங்களின் பெருக்கம் சமநிலைப்படுகிறது. இயற்கை வேளாண்மையினால் சுற்றுச்சூழலைப்பாதிக்கும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தடுக்கப்பட்டு பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் குறைகிறது. இயற்கை வேளாண்மையில் அங்ககப் பொருட்களின் சுழற்சி மற்றும் பயிர்ச்சத்துக்களின் உபயோகம் முறைப்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவு அதிகரிப்பதில்லை. இயற்கை வேளாண்மை முறைகள் மண்ணின் வளம், மண்ணின் அமைப்பு மற்றும் நீர்பிடிப்புத்திறனை மேம்படுத்துவதினால் நிலமானது தரிசாகாமல் என்றென்றும் பசுமையாக இருந்து பலன் அளிக்க வல்லதாக இருப்பதற்கு உதவுகிறது. எனவே, விவசாயப் பெருமக்கள் ஏதேனும் ஒரு வகையில் பயிர் சாகுபடியில் இயற்கை இடுபொருட்களின் (2-ம்) பசுந்தாள் உரப்பயிர்கள், மண்புழு உரம், கம்போஸ்ட், வேளாண் தொழிற்சாலைக் கழிவுகள்) பயன்பாட்டினை அதிகரித்து மண்வளத்தைக் காத்து பயன்பெற வேண்டுகிறோம். - முனைவர் து. செந்திவேல்பேராசிரியர் (உழவியல்)காந்திகிராமம் - 624 302.திண்டுக்கல் மாவட்டம்.94435 70103
தீவன மரம் பசுந்தீவன உற்பத்தி மூலம் கால்நடை வளர்ப்பு
கால்நடை வளர்த்தால் தான் விவசாயிகள் நீடித்த வேளாண்மையை எளிதில் செய்யலாம். நல்ல லாபம் தரும் காய்கறிகள், பழங்கள் மூலம் வருமானம் பெறுவதை விட தீவன மரங்கள், பசுந்தீவன வகை தாவரங்களையும் தனியாகவோ, வரப்புப் பயிராகவோ கலப்பு பயிராகவும் வளர்க்கலாம். வேலிப் பயிராகவும் பராமரித்தால் லாபம் உண்டு. ஒரு ஏக்கர் பரப்பில் 16000 கிலோ சவுண்டல் எனும் மரப்பயிர் தீவனம் தரும் போது நிறைய ஆடுகள் வளர்க்க வாய்ப்பும் உள்ளது. இவை தவிரவும் கிளரிசிடியா, மல்பரி, பூவரசு, வாதநாராயணன், மரங்கள் பசுந்தீவனம் நிலையாக பெற உதவும்.பில்லிப்பிசரா, சணப்பை, கொள்ளு, பயறு வகைகள் எல்லாம் நிறைய தீவனம் தரும் வகைகள் தான். தீவன மரம் வளர்ப்பது எளிது. குறிப்பாக அகத்தி, செடி முருங்கை மரங்கள் கூட பல நன்மைகள் பெற உதவுபவை. வறட்சி தாங்கி வளரும் கொழுக்கட்டைப்புல், எருமைப்புல், கம்பு நேப்பியர் புல், குதிரைவாலிபுல், அருகம்புல் முதலியன மேலும் உதவுபவை. உரிய இடம் இருந்தும் முறையாக திட்டமிட்டு கால்நடைகளை சேர்க்காமல் செய்யும் விவசாயத்தால் நல்ல லாபம் வராது. கால்நடைகள் நிரந்தர வங்கிகளாக ஒருமுறை கடனாக வங்கியில்பணம் பெற்று ஆட்டுப்பட்டி கன்றுகள் பண்ணை வைத்தால் கூட ஒரே ஆண்டில் கை நிறைய காசு பார்க்கலாம்.முடிந்த அளவு முயற்சித்தாலோ போதும். ஒரு ஏக்கர் உள்ள சிறு விவசாயி கூட 50 ஆட்டுக்குட்டிகள் அல்லது 10 கன்றுகள் வளர்த்து 6 மாதம் பராமரித்து விற்றால் கூட ரூ.50,000 தாராளமாக ஆண்டு வருமானம் லாபமாக பெறலாம். தொழில் முனைவோராக இதற்கு ஒருநாள் பயிற்சி மற்றும் நேரடி செயல்விளக்கம் வந்து கூட பயிற்சி தர வாய்ப்பும் உள்ளது.கால்நடை மூலம் பெறும் கழிவுகளையும் தரமான உரமாக்கி, மண்புழு குழியில் இட்டு மதிப்புக்கூட்டில் நல்ல மண்வளம் பேணுவது தான் இயற்கை வேளாண்மை இதற்கு நிறைய அரசு உதவிகள் உள்ளன. உங்கள் நிலத்தை இயற்கை விவசாயப் பண்ணையாக மாற்ற உரிய தொழில்நுட்ப உதவிகள் தரப்படுகிறது. சிறப்பு பயிற்சிகள் பெற விருப்பம் உள்ளவர்கள் 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.- டாக்டர் பா.இளங்கோவன்,உடுமலை, திருப்பூர் மாவட்டம்.
விளை நிலத்தின் சிறு பரப்பில் சிறு தானிய சாகுபடி அவசியம்
முன் மாதிரியாக வழிகாட்டுகிறார் தேனி விவசாயிவிளை நிலத்தின் சிறு பரப்பில் சிறு தானிய சாகுபடி அவசியம் என்று முன் மாதிரியாக இருந்து பிற விவசாயிகளையும் வலியுறுத்தி வருகிறார் தேனியை சேர்ந்த விவசாயி ரத்தினம்.நாட்டுத் தக்காளி, பச்சை மிளகாய் போன்றவை தற்போதைய கால கட்டத்தில் கிடைப்பது அரிதாக உள்ளது. உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வீரிய ஒட்டு நெல், காய்கறிகள், பழங்கள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.இந்நிலையில் தேனி அருகே டொம்புச்சேரி பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி ரத்தினம், சாகுபடி பரப்பில் ஒரு பகுதியை சிறு தானியங்களை பயிர் செய்து இயற்கை வேளாண்மை குறித்து பிற விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவர் கூறியதாவது: தற்போது பயன்படுத்தப்படும் வீரிய ஒட்டு ரகங்களில் பூச்சி கொல்லி மருந்து, ரசாயன உரம் பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கணக்கில் இந்த உணவு வகைகளை உண்பதால் மனிதர்களுக்கு இளம் வயதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட புதுப்புது நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் பெரும்பாலும் கம்பு, சோளம், சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானிய பயிர்கள் பயிரிட்டு வந்தனர். அதையே உணவாகவும் உட்கொண்டு விற்பனையும் செய்து வந்தனர். ஆனால் இன்று அதிக வருவாய் ஈட்டக்கூடிய வகையில் வீரிய ஒட்டு ரக விளைபொருட்கள் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகளும் சிறுதானிய உணவு வகைகளை மறந்து, அரிசி உள்ளிட்ட உணவு வகைகளை நாள்தோறும் உட்கொள்வதால் அவர்களும் உடல் அளவில் பலம் இழந்து காணப்படுகின்றனர்.எனவே நான் எங்களது தோட்டத்தில் உள்ள விளை நிலங்களில் மூன்றில் ஒரு பங்கில் சிறு தானிய உணவு வகைகளை பயிர்செய்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவியது. இருந்தாலும் இரண்டு ஏக்கரில் குதிரை வாலி சாகுபடி செய்திருந்தேன். போதிய மழை இல்லாததால் 3 மூடை கிடைத்தது. ஆனால் தற்போது உள்ள மில்களில் பெரும்பாலும் சிறு தானியங்களை அரைத்து கொடுப்பதற்கு போதிய வசதி இல்லாமல் உள்ளனர். இதனால் இதை அரைத்து உணவு பொருளாக மாற்றுவதற்கு பெரும்பாடு பட்டுவிட்டேன்.தற்போது இரண்டு ஏக்கரில் சாமை பயிர் சாகுபடி செய்துள்ளேன். 90 நாள் பயிர். கடந்த மாதம் மழை பெய்ததால் நன்கு வளர்ந்து வருகிறது. இனி எந்த வித பிரச்னையும் இல்லாம் இருக்கும். வரும் மார்கழி 10 ல் அறுவடை செய்வோம். தற்போதைய நிலையில் மூடை 5000 முதல் 6000 ரூபாய் வரை விலை போகிறது. இந்நிலை நீடித்தால் எங்களுக்கு லாபம் கிடைக்கும். மேலும் எங்கள் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துவோம், என்றார். இவருடன் பேச 94424 94427. கருணாகரன், தேனி.
Wednesday, 17 December 2014
இயற்கை விவசாயத்தில் பார்த்தீனியம்
தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட தாவரமான பார்த்தீனியம் நம்மால் தான் நிலத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது விசித்திரமான உண்மையாகும்.அரை அடி முதல் 3 அடி வரை மண் கண்டத்துள்ளே அங்கிங்கெணாதபடி களை விதைகள் பல்கி பரவிக் கிடப்பதே அரைகுறையான மட்காத குப்பை உரத்தை இடுவதால் தான். ஆம், கால்நடை உண்ட களைச்செடி விதைகள் சாணத்துடன் வெளியே வந்து பத்திரமாக மேற்பரப்பில் பதப்படுத்தப்பட்டு பிறகு எடுத்து வீசும்போது நீரைக்கண்டதும் குப்பென்று வளர்ந்து விடுகிறது. எனவே களைகள் வரும் இந்த வழியை மாற்றி யோசித்து மண்புழு உரமாக இட்டால் நிச்சயம் களைக்கு வேலையில்லை.அப்படியே களைகள் வந்தாலும் அதனை முறையாக சேகரம் செய்து மட்கச் செய்து மகத்தான உரமாக மீளப்பயன்படுத்தலாம். இதற்கு எந்தக் களையானாலும் விதிவிலக்கல்ல. நல்ல இலைப்பரப்பு அதிகம் கொண்ட பசுந்தழைகள் அடங்கிய பலவித மரங்களின் இலைகளையும் சேகரம் செய்து பார்த்தீனியம் மற்றும் இதர புல்வகைச் களைகளையும் களை நீக்கும் கருவிகள் கொண்டு அறுத்து வதங்க வைத்து அப்புறப்படுத்தி பதப்படுத்தி மண்புழு உரக்குழியில் இட்டு மண்புழு உரமாக மாற்றலாம். அல்லது இதற்கு கம்போஸ்ட் குழி தயாரித்திட எல்லா இடத்திலும் வாய்ப்புள்ளது. நீளம் 15 அடி அகலம் 8 அடி மற்றும் ஆழம் 3 அடி உள்ள குழிகள் தோண்டினால் ஒரு ஏக்கருக்குத் தேவையான உரம் பெற வாய்ப்புள்ளது.திடல்கள், சேமிப்பு கூடங்கள் மற்றும் நடைபாதைகள், கல்வி சாலைகள், பூங்காக்கள் பேருந்து நிறுத்தங்கள் இங்கு வளர்ந்துள்ள பார்த்தீனியத்தை 10 லிட்டர் தண்ணீரில் 1.5 கிலோ சாப்பாட்டு உப்பு கரைத்து தெளித்து சுத்தமாக அழிக்கலாம். உயிரியல் முறைப்படி "சைக்கோகிரம்மா' எனும் புள்ளி உடைய ஈச்சங்காய் போன்ற மஞ்சள் வண்ண வண்டுகளை சேகரம் செய்து பார்த்தீனியம் உள்ள இடத்தில் மெதுவாக அவற்றை சுத்தமாக அழிக்கலாம்.களை வரும் முன்பே முந்தி ஊடுபயிர்,மூடு பயிர், வரப்பு பயிர் மற்றும் நிலப்போர்வை அமைத்தல் மூலம் பார்த்தீனியம் தரும் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம். மேலும் விவரம் பெற 98420 07125 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.- டாக்டர். பா.இளங்கோவன்உடுமலை, திருப்பூர்.
Tuesday, 16 December 2014
பாரம்பரிய "பூங்கார்' நெல்லுக்கு, புத்துணர்வூட்டும் விவசாயி
ராமநாதபுரம்- மதுரை ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள எட்டியவல் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து, எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் வயல் காணப்படும். உள்ளே நுழைந்தால், மாப்பிள்ளை சம்பா, கருங்குருணை, அம்பாசமுத்திரம், பூங்கார் என பாரம்பரியமிக்க ரகங்களான நெல் சாகுபடியும், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, சோளம், உளுந்து ஆகிய சிறுதானிய பயிர்களும் புஞ்சை நிலங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.செடிமுருங்கை உள்ளிட்ட கீரைவகைகள், பண்ணை குட்டைகளில் மீன்வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு, காங்கேயம் போன்ற உயர்ரக மாடுகள் வளர்ப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம். விவசாயி ஆர்.முருகேசன் கூறியதாவது: யோகா ஆசிரியரான, எனக்கு விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அழிந்துவரும் விவசாயத்திற்கு புத்துணர்வூட்டும் வகையில் பாரம்பரியமிக்க நெல், தானியங்கள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பலமுறை எனது தோட்டத்திற்கு வந்துள்ளார்.அவரின் ஆலோசனையின் பேரில் முழுக்க...முழுக்க இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா நெல் 2 ஏக்கரிலும், பூங்கார் 2 ஏக்கரிலும், அம்பாசமுத்திரம் 2 ஏக்கரிலும் நடவு செய்துள்ளேன். இதில், பூங்கார் வறட்சியை தாங்கி விளையும் நெல் பயிராகும். 70 முதல் 80 நாட்களில் மகசூல் கிடைக்கும்.தற்போது இந்த ரக நெல் மகசூல் பருவத்தை எட்டியுள்ளது. நடவு செய்த நாள் முதல் "பஞ்ச கவ்யம்' எனும் உரம் போட்டு வருகிறேன். இந்த உரம், மாட்டுச்சாணம், கோமியம், வெல்லம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்பட்டது. இதுபோன்ற இயற்கை உரமிடுவதால் பயிர் நன்றாக வளரும். பூச்சி தாக்குதல் இருக்காது.ஏக்கருக்கு 30 மூடை பூங்கார் ரக நெல் மகசூல் கிடைக்கிறது. ஒரு மூடை 1,500 ரூபாய் வரை விலை போகிறது. இதனால், 2 ஏக்கர் பூங்கார் நெல் சாகுபடி மூலம் ஆண்டிற்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் லாபம் கிடைத்து வருகிறது. இதுதவிர, நாவல், நெல்லி, மா, வேம்பு, புங்கன், மகோகனி உட்பட 3,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன். பூசணி, வெண்டை, கத்திரி, கொத்தவரை உள்ளிட்ட காய்கறி செடிகளையும் நடவு செய்துள்ளேன்.பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு 4 இடங்களில் 21 அடி ஆழமுள்ள பண்ணை குட்டைகளை வெட்டியுள்ளேன். "மோட்டார் பம்பு செட்' மூலம் அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். எனது தோட்டம் மூலம் ஆண்டிற்கு 30 லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன், என்றார்.ஆலோசனை பெற 94434 65991ல் தொடர்பு கொள்ளலாம்.- ஆர். ராஜ்குமார்,
Tuesday, 9 December 2014
34 சென்ட்...திட்டம்
ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். குறிப்பாக, சில ஏக்கர்களாவது இருந்தால்தான் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க முடியும்’ என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. இதை அடித்து நொறுக்கும் வகையில்... வெறும் 34 சென்ட் இடத்தில் ஆடு, கோழி, மீன், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மூலிகைகள் என தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அடக்கிவிட முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஃபெலிக்ஸ். பசுமை போர்த்திய இவருடைய பண்ணையில் நுழைந்தபோது... ஆடுகளின் 'மேமே’ சத்தம், கோழி மற்றும் சேவல்களின் கூவல் என ரம்மியமாக கலந்து வந்து கொண்டிருந்தது. நாம் அதில் லயித்திருக்க, நம் தோள் தட்டி கவனத்தைத் திருப்பினார், ஃபெலிக்ஸ்.''13 வருசமா மகாராஷ்டிர மாநிலம், புனே நகரத்துல இருக்கிற சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பாத்தேன். கை நிறைய சம்பளம் கிடைச்சுது. ஆனா, வேலைச்சுமை அதிகம். மெஷின் மாதிரி போயிட்டு இருந்தது வாழ்க்கை. தேவைக்கு அதிகமா பணம் இருந்தாலும் மனசு வெறுமையாத்தான் இருந்துச்சு. அதுக்காகத்தான் இயற்கைச் சூழலைத் தேடிட்டு இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் மூலமா 'சட்டையில்லா சாமியப்பன்’ ஐயாவோட அறிமுகம் கிடைச்சுது. அவர்தான் இயற்கை விவசாய முறைகளைக் கத்துக் கொடுத்தார்.ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு கடையத்துக்கே வந்து, வீட்டை ஒட்டியிருந்த 34 சென்ட் இடத்துல சின்னதா விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். இப்போ ரெண்டு வருஷம் ஓடிடுச்சு. இங்க பெர்மா கல்ச்சர் (நிரந்தர வேளாண்மை) முறையில வேளாண்மை பண்றோம். உழைப்பையும் முதலீட்டையும் குறைச்சுக்கிட்டு மகசூலையும், வருமானத்தையும் எடுக்கிறதுதான் இந்த முறையோட குறிக்கோள். இப்ப எங்க வீட்டுத் தேவையில 80% இந்த இடத்துக்குள்ளயே கிடைச்சுடுது. இதையெல்லாம்விட, மனசுக்கு 100% நிறைவு கிடைச்சிருக்கு'' என சிலாகித்த ஃபெலிக்ஸ், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தகவலுக்குள் புகுந்தார்.
தண்ணீர் மேலாண்மைக்கு தாமரைக்குளம்!'
அரை வட்டமா ஒரு தாமரைக்குளம் அமைச்சு, அதுல முக்கோண வடிவத்துல கால் அடி உயரத்தில் மூணு தடுப்புகளை வெச்சு... மழைத்தண்ணி இந்தக் குளத்துக்குள்ள வர்ற மாதிரி குழாய் அமைச்சிருக்கேன். குளம் நிறைஞ்சதும் வாய்க்கால் வழியா மீன் குளத்துக்கு தண்ணி போயிடும். வெளியில இருந்து வர்ற தண்ணி, சுத்த மானதாக இருக்காதுங்கிறதாலதான் இந்தத் தாமரைக்குளத்துல தடுப்புகள் இருக்கு. வாய்க்கால்ல கல்வாழை, மஞ்சள், இஞ்சி நட்டிருக்கேன். இது மூணும் தண்ணியை சுத்தப்படுத்தி அனுப்பும். இதில் கல்வாழைக் குத்தான் பெரும் பங்கு. இதேபோல வீட்டுக்குப் பின்பகுதியிலும் குளியலறை, சமையலறை கழிவுநீர் சேர்ற இடத்திலயும் கல்வாழை, மூலிகைகள், கீரைகளை நட்டிருக்கேன்.
பசுந்தீவனத்தில் கலப்புத்தீவனம்!
ஆடுகளுக்காக 10 அடி நீளம், 15 அடி அகலத்தில் தரையில் இருந்து 10 அடி உயரத் தில் பரண் அமைச்சிருக்கேன். பரணுக்குக் கீழே வந்து விழும் ஆடுகளோட கழிவுகள்ல உருவாகுற புழு, பூச்சிகள் கோழிகளுக்கு உணவாகிடுது. மீதமுள்ள சிறுநீர் கலந்த புழுக்கைகளை மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கிறேன். இப்ப என்கிட்ட 7 கன்னி, 4 நாடு, 2 ஜமுனாபாரினு மொத்தம் 13 ஆடுகள் இருக்கு. ஆடுகளுக்கு தீவனத்துக்காக 15 சென்ட்ல அகத்தி, சித்தகத்தி, சூபாபுல்,கோ-4, கோ.எஃப்.எஸ்-29, வேலிமசால், முயல்மசால், குதிரைமசால், மல்பெரி, சங்குப்புஷ்பம், ஆமணக்கு, முருங்கை, கிளரிசீடியா, பப்பாளி, பாதாம், கப்பை, சீனிக்கிழங்குக் கொடி, கினியாபுல், தீவனத்தட்டை, கொழுக்கட்டைப்புல், எலுமிச்சைப்புல், தீவனக்கம்பு, தீவனச்சோளம், கொள்ளு... இப்படி மொத்தம் 30 வகையான தீவனங்களைக் கலந்து நடவு செய்திருக்கேன். கலப்புத் தீவனமாகக் கொடுத்தால்தான் ஆடுகளோட வளர்ச்சி நல்லா இருக்கும். காலையில 11 மணிக்கும், மாலையில 4 மணிக்கும் 20 கிலோ பசுந்தீவனத்தை அறுத்து வெச்சுடுவோம். காலை, மதியம், மாலையில் தண்ணீரை மாத்தணும். காலையில் வைத்த தீவனத்தில் மிச்சம் இருந்தா, எருக்குழியில போட்டுடுவேன். இதுல உருவாகுற புழு, பூச்சிகள் கோழிகளுக்குத் தீவனமாயிடும்' என்று எளிய நுட்பங்களை அடுக்கிய ஃபெலிக்ஸ், அடுத்ததாக கோழிகள் மற்றும் மீன் பற்றிச் சொன்னார்.
1,000 ரூபாய்க்கு விற்பனையாகும் வனராணி!
'சண்டைச் சேவல் 15, நாட்டுக்கோழி 5, வனராணிக் கோழி 2, குஞ்சுகள் 20 னு மொத்தம் 42 உருப்படிகள் இருக்கு. 6 அடி நீளம், 8 அடி அகலம் 5 அடி உயரத்துல கோழிக் கொட்டகை அமைச்சிருக்கேன். கொட்டகைக்குள்ள நீளமான கம்புகளை தனித்தனியாகக் கட்டி வெச்சிருக்கேன். கோழிகள் இந்தக் கம்புகள் மேல ஏறி உட்கார்ந்துக்கும். கோதுமை, கம்பு, மக்காச்சோளம் மூணையும் கலந்து தட்டுகள்ல வெச்சுடுவேன். மத்தபடி கோழிகளை மேய்ச்சல் முறையிலதான் வளக்குறேன்.
இலைதழைகளை உண்டு வளருது, மீன்
!மீன் வளக்குறதுக்காக 15 அடி நீளம், 18 அடி அகலம், 4 அடி ஆழத்துல ஹாலோபிளாக்ல தொட்டி கட்டியிருக்கேன். அடியில சிமெண்ட் போடாம களிமண்ணைக் கொட்டியிருக்கேன். களிமண்ணைப் போட்டா நுண்ணுயிர்ப் பெருக்கம் இருக்கும். ரோகு, கட்லா, மிர்கால், புல் கெண்டை, சாதா கெண்டைனு கலந்து 200 மீன்குஞ்சுகள் விட்டிருக்கேன். புல், முருங்கை, அகத்தி இலைகளை குளத்துல தூவினால் மீன்கள் சாப்பிட்டுக்குது. தவிடு, பிண்ணாக்கு கலவையெல்லாம் கொடுக்குறதில்லை. தவிடு கொடுத்தா வளர்ச்சி அதிகமாயிருக்கும். ஆனா, மீன் ருசியா இருக்காது. தவிடு கொடுக்கும்போது 6 மாசத்துல கிடைக்கிற வளர்ச்சி, இலைகளைக் கொடுக்கும்போது ஒரு வருஷம் ஆகும். அதேசமயம், இலைதழைகளைக் கொடுக்குறப்பதான் மீன் சத்தாவும் ருசியாவும் இருக்கும்.
மூலிகைகள், கீரைகள், பழங்கள்!
துளசி, தூதுவளை, சிறியாநங்கை, இன்சுலின், ஆவாரை, சித்தரத்தை, பால்பெருக்கி, அம்மான் பச்சரிசி, தும்பை, துத்தி, கண்டங்கத்தரி, யூகலிப்டஸ், ஆடாதொடை, கிரந்திநாயகம், முசுமுசுக்கை, இஞ்சி, வசம்பு, கிராம்பு, திப்பிலி, மிளகு, வெற்றிலைனு அறுபது வகையான மூலிகைகளும்; புதினா, கறிவேப்பிலை, வல்லாரை, அரைக்கீரை, மணத்தக்காளி, பசலி, பொன்னாங்கண்ணி, தண்டுக்கீரை, முளைகீரை, புளியாரைனு 30 வகையான கீரைகளும்; கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பூசணி, சுரை, புடல், பீர்க்கன், அவரை, கொத்தவரை, தடியங்காய்னு பலவகை காய்கறிகளும்; சேனை, மரவள்ளி, பால்சேம்பு, சர்க்கரைவள்ளி, சிறுகிழங்கு, வெற்றிலை வள்ளிக்கிழங்குனு கிழங்கு வகைகளும்; கொய்யா, அன்னாசி, மங்குஸ்தான், பப்பாளி, மா, பலா, நெல்லி, மாதுளை, அத்தி, வாழைனு பழ வகைகளையும் மேட்டுப்பாத்தி முறையில சாகுபடி செய்திருக்கேன் என்ற ஃபெலிக்ஸ், நிறைவாக வருமானம் பற்றிய தகவல்களுக்குள் புகுந்தார்.
விற்பனை வாய்ப்பு!''
இந்தப் பண்ணையில இருந்து ஆடு, கோழி களை மட்டும்தான் விற்பனை செய்றேன். மற்றது என் வீட்டுத்தேவைக்கு மட்டும்தான். விற்பனைக்காக யாரையும் தேடிப் போற தில்லை. நேரடியாக வர்றவங்களுக்கு மட்டும் தான் விற்பனை செய்றேன். 10 ஆடுகள் இருந்தா, வருசத்துக்கு 30 குட்டிகள் கிடைக்கும். குட்டிகளை வளர்த்து சராசரியாக ஒரு குட்டி 6 ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். கோழிகளைப் பொறுத்தவரை சண்டைச்சேவலை 1,500 ரூபாய்க்கும், நாட்டுக்கோழியை 350 ரூபாய்க்கும், வனராணியை 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். வருஷத்துக்கு சராசரியா 25 கோழிகள் விற்பனை செய்றேன். அது மூலமா 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தத்தில் கோழி, ஆடுகள் மூலமா வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கிது. வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறி களும் கிடைச்சுடுது. ஒரு வாரத்துக்கு காய் களுக்கு 300 ரூபாய்னு வெச்சுக்கிட்டா வருசத் துக்கு 15 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வரும். அது அப்படியே மிச்சம். இதே மாதிரி, பழங்கள், மீன்கள், கீரைகள், மூலிகைகள் மூலமா, 30 ஆயிரம் ரூபாய் மிச்சம். தேவையான அத்தனைக்கும் 100 சதவிகிதம் மத்தவங் களை நம்பிட்டு இருந்த நான், இப்போ, 80% தற்சார்பு அடைஞ்சுட்டேன். அடுத்து, நாய்கள், லவ் பேர்ட்ஸ், முயல், புறா, காளான், தேனீ வளர்ப்புனு இறங்கப்போறேன்' என்று எதிர்கால திட்டத்தையும் சேர்த்தே சொன்னார், ஃபெலிக்ஸ் பெருத்த எதிர்பார்ப்போடு!

Monday, 8 December 2014
நவீன கரும்பு சாகுபடி: தண்ணீர் குறைவு-மகசூல் அதிகம்
காஞ்சிபுரம்: குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறிய தகவல்கள்:
முக்கிய அம்சங்கள்: ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் தயாரித்தல் வேண்டும். இளம் (25 முதல் 30 நாள்) நாற்றுகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் உரமிடுதல், ஊடு பயிரிட்டு மண் வளம், மகசூல் அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த உரங்கள், பயிர் பாதுகாப்பு, பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.
நாற்றுகள் தயார் செய்யத் தேவையானப் பொருட்கள்:
5000 ஒரு விதைப்பரு சீவல்கள், 100 குழித்தட்டுகள் (ஒவ்வொன்றிலும் 50 குழிகள்) 150 கிலோ கோகோபிட். ஒரு விதைப்பரு சீவல்களை தெரிவு செய்தல்: ஆரோக்கியமான 7 முதல் 9 மாதங்களான கரும்பிலிருந்து, கணுக்களுக்கிடையே 7 முதல் 8 அங்குலம் இடைவெளியுள்ள விதைப் பருக்களை தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்கிய, பழுதடைந்த விதைப் பருக்களை தவிர்ப்பது அவசியம். தேவையான அளவு கரும்பை வெட்டி எடுத்துக் கொள்ளவும், வெட்டப்பட்ட கரும்பிலிருந்து ஒரு விதைப்பரு சீவல்களை வெட்டுக்கருவி கொண்டு வெட்டி எடுக்கவும்.
சீரான நாற்றுகளைப் பெறவழிமுறைகள்:
விதைப்பரு சீவல்களை வெட்டி எடுத்தவுடன், அவற்றில் சிலவற்றை 1 சதவீத சுண்ணாம்புக் கரைசலில் நனைத்து ஈரமான ஒரு சாக்குப்பையில் 3 முதல் 4 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும். 4-வது நாளின் இறுதியில் சாக்குப்பையை திறந்து அவற்றில் நன்கு முளைவிட்ட ஆரோக்கியமான விதைப் பருக்களை தேர்வு செய்யவும். ப்ளாஸ்டிக் ட்ரேக்களில் முளைவிடாது போன விதைப்பருக்களுக்கு பதிலாக இந்த ஆரோக்கியமான பருக்களை எடுத்து வைக்கலாம். இந்த முறை மூலம் தரமான நாற்றுகளை பெறுவதும், சீரான வளர்ச்சியும் சாத்தியமாகிறது.
நாற்று தயார் செய்தல்:
6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து மொட்டுகளை சேகரிக்க வேண்டும். அதில் 5,000 மொட்டுகளை (ஒரு விதைப்பரு சீவல்கள்) எடுத்து டிரைக்கோடெர்மா விரிடி (1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) கலந்த தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும். பின்னர் இந்த மொட்டுகளை கோணிப்பையில் இறுகக் கட்டி நிழலில் 5 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குழித்தட்டுகளில் பாதியளவு கோகோ பீட் எரு கொண்டு நிரப்பி அதில் விதை மொட்டுகள் மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும். நிழல் வலை அல்லது மர நிழலில் வைத்து 25 முதல் 30 நாள்கள் வரை நீர் தெளிக்க வேண்டும். நிலம் தயார் செய்தல்: பயிர்க் கழிவுகளை நீக்கியவுடன் நிலத்தில் உள்ள மண் கட்டிகளை உடைக்க வேண்டும். டிராக்டர் உதவியுடன் ஆழமாக ஒன்று அல்லது இரண்டு உழவுகள் (30 செ.மீ.க்கு மேல்) செய்ய வேண்டும். பின்பு சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்த வேண்டும். இயற்கை உரங்களான தொழுஉரம் ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன்கள் அளிப்பததோடு அதனுடன் ட்ரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு ஒரு கிலோ கலந்து இடவேண்டும். பார்களை 5 அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.
நாற்று நடவு செய்தல்:
25 முதல் 30 நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு நாள் முன்பு நாற்றுகளுக்கு நீர் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இப்படி செய்வதால் நாற்றுகளை எளிதாக எடுக்கலாம். நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை பொருட்டு நீர் பாய்ச்ச வேண்டும். அதே போல் நடவுக்குப் பின்பும் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 15-க்கும் மேற்பட்ட தூர்கள் 2 மாதத்திற்குள் உருவாகும். 2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும். மண் அணைத்தல், சோகை உரித்தல்: நடவு செய்த 45-வது நாள் மற்றும் 90-வது நாளில் மண் அணைப்பு செய்தல் வேண்டும். ஒளிச்சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8 முதல் 10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த, சில காயாத இலைகளை 5-வது, 7வது மாதத்தில் உரித்து பார் இடைவெளிகளில் இட வேண்டும். வேலையாட்கள் கொண்டோ, கருவிகள் மூலமாகவோ நடவுக்குப் பின் 30, 60, 90-வது நாள்களில் களை எடுக்க வேண்டும்.
மூடாக்கு:
மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணிலுள்ள களைகள் கட்டுப்படுவதுடன் மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. கரும்பு சோகைகள் ஏக்கருக்கு 1.5 டன் அளவு நடவுக்கு 3 நாள்களுக்கு பின் பரப்பி விட வேண்டும். அதே போல், சோகை உரித்த பின் அவைகளை பார் இடைவெளிகளில் பரப்பி விடவேண்டும். நீர் மேலாண்மை: கரும்பு பயிருக்கு அதன் மொத்த வளர்ச்சிப் பருவத்தில் ஏக்கருக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 90 சதவீதம் வரை நீர் உபயோகிப்புத் திறனை அதிகரித்து 40 முதல் 70 சதவீதம் வரை நீரை சேமிக்க முடியும். நடவுக்குப் பின் மண்ணின் தன்மையைப் பொறுத்தும் பயிரின் வயதைப் பொறுத்தும், மழை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்தும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். கிளை விடும் பருவத்தில் (36 முதல் 100 நாள்கள்) 10 நாள்களுக்கு ஒரு முறையும், அதிக வளர்ச்சி பருவத்தில் (101 முதல் 270 நாள்கள்) 7 நாள்களுக்கு ஒரு முறையும், முதிர்ச்சிப் பருவத்தில் (271 நாள் முதல் அறுவடை வரை) 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம்: நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப் பாசனம் சாலச் சிறந்தது. 3 நாள்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் செய்ய வேண்டும். இம்முறையில் 45 சதவீதம் பாசன நீரை (1,200 மி.மீ.) சேமிக்க முடியும். இயற்கை உரம் அளித்தல்: நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை இயற்கை முறையில் உரம் அளித்தலை அதிகரிக்கிறது. இதன் மூலம் மண்ணுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் கிடைப்பதோடு, மண்ணின் உயிர்த்தன்மையும் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை உரங்களான தொ6ழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது மக்கிய ப்ரஸ் மட் ஆகியவற்றை ஏக்கருக்கு 8 முதல் 10 டன் என்ற அளவிற்கு கொடுப்பது நல்லது.தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 112 கிலோ கிடைக்கும் அளவிற்கு சரிபார்த்து மேற்கண்ட உரங்களை இடுவது நல்லது. இயற்கை உரங்களோடு ட்ரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு 1 கிலோ அளவில் கலந்து கொடுப்பது மிகவும் நல்லது
. ஊடுபயிர்: நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளி இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்ப்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களைக் கட்டுப்பாடு, மண்வளத்தைப் பெருக்க முடியும். மகசூல்: மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில் நுட்பங்களையும் சரியாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டிலிருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் மொட்டுக்கள் எனக் கணக்கிடும் போது 150 டன்கள் வரை மகசூல் பெற வாய்ப்பு உள்ளது.

Tuesday, 2 December 2014
"துவரை இருந்தால் கவலை இல்லை'
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துவரைப் பயிர் சாகுபடி செய்தால் அதிக விளைச்சலும், நிரந்தர வருமானமும் பெற்று விவசாயிகள் கவலை இன்றி வாழலாம் என்று வேளாண் அறிவியல் நிலையம் தெரிவிக்கிறது.பயறுவகை பயிர்களில் அதிகப் புரதச்சத்து இருப்பதால் துவரைக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் உண்டு. சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இது வரப் பிரசாதம். இப் பயிருக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்றாலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்வது வழக்கத்தில் இல்லை.ஆனால் தற்போது புதிய ரகங்களைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பமான நடவு முறையில் சாகுபடி மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெறலாம்.இதற்கான வழிமுறைகள் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன் கூறிய விவரங்கள்:தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசிப் பட்டங்கள், கோடைப் பருவகாலங்களில் துவரை பயிரிடப்பட்டாலும், ஆடிப் பட்டத்தில்தான் சாகுபடிப் பரப்பு அதிகமாக உள்ளது. இப் பயிரின் சராசரி விளைச்சல் ஹெக்டேருக்கு 763 கிலோ ஆகும்.பருவம், ரகங்கள்: ஆடிப் பட்டம்: எஸ்.ஏ.-1, கோ-5, 6, கோ.பி,எச். -1, 2, வம்பன் -1, 2புரட்டாசிப் பட்டம் : கோ-5, கோ.பி,எச். -1, 2, கோ (ஆர்.ஜி) 7, ஏ.பி.கே. 1. கோடைக்காலம்: கோ -4, 5, கோ.பி.எச்.1, 2, பி.எஸ்.ஆர்.1, வம்பன் - 1, எஸ்.ஏ.1.
நடவுமுறை சாகுபடி:துவரையில் நடவு முறை சாகுபடிக்கு ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவை. ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தைக் கலக்க வேண்டும். பூஞ்சாணக்கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்கு பின் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் கலவையை 100 மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் நன்கு கலந்து 15 நிமிடம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகளில் (6க்கு 4) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க நான்கு துளைகள் போடலாம். பிறகு விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 25 - 30 நாள்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்பு நடவு செய்வது நல்லது.வடிகால் வசதிகொண்ட செம்மண் அல்லது வண்டல் மண் நிலங்கள் துவரை சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது. பிப்ரவரி மாதத்தில் ரபி பருவப் பயிர்கள் அறுவடை முடிந்தவுடன் மார்ச் - எப்ரல் மாதங்களில் 2, 3 முறை கோடை உழவு செய்யப்பட வேண்டும். துவரை நடவு செய்வதற்கு சுமார் 3 வாரங்களுக்கு முன்பு நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் 2.5 டன் அளவில் இடலாம்.இறவை அல்லது மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 சதுர செ.மீ. அளவுள்ள குழிகளை 5 க்கு 3 அடி இடைவெளியிலும் (1 ஏக்கருக்கு 2904 பயிர்), 6 க்கு 3 அடி (1 ஏக்கருக்கு 2420 பயிர்) என்ற இடைவெளியிலும் குழிகள் எடுக்க வேண்டும்.நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும்.ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயா, மொச்சை போன்ற பயிர்களை விதைத்து, பிறகு துவரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும். பின்பு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப 3 முதல் 4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும்.நடவு செய்த 30 முதல் 40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும். மேலும், நடவுப் பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்துப் பராமரிக்கலாம்.
பூக்கள் உதிர்தல்:பூக்கள் உதிர்வதைத் தடுப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீத விளைச்சல் இழப்பைத் தவிர்க்கலாம். நாப்தலின் அசிடிக் ஆசிட் (என்.ஏ.ஏ.) பயிர் ஊக்கியை 40 பி.பி.எம். என்ற அளவில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்க வேண்டும். இதைப் பூச்சி, பூஞ்சாண மருந்துகளுடன் கலந்தோ அல்லது உப்பு நீரில் கலந்தோ தெளிக்கக் கூடாது.கைத்தெளிப்பான் கொண்டு செடிகள் நன்கு நனையுமாறு அதிகாலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.பூக்கள் உதிர்வதைக் குறைப்பதற்கும், அதிக காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பயறு ஒண்டர் ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணத்திலும், 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மானாவாரியில் 10 முதல் 15 விழுக்காடு விளைச்சலை அதிகரிக்கலாம்.
பயிர்ப் பாதுகாப்பு முறைகள்:
1. வம்பன் 1, 2 அல்லது ஏ.பி.கே. 1 அல்லது கோ (ஆர்.ஜி.7) இரகங்களைத் தேர்வு செய்வது சிறந்தது.
2. ஹெக்டேருக்கு 12 ஹெலிக்கோவெர்ப்பா இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் வேண்டும்.
3. ஹெக்டேருக்கு 50 பறவைத் தாங்கிகள் அமைத்து இரை விழுங்கிகளை ஊக்குவித்தல் வேண்டும்.
4. முடிந்தவரை காய்ப்புழுக்கள் மற்றும் பூ வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
5. பச்சைக் காய்ப்புழு சேதம் மட்டும் இருப்பின் ஹெக்டேருக்கு 1.5 லிட்டர் வீதத்தில் ஹெலிக்கோவெர்ப்பா என்.பி.வி. கரைசல் தெளித்தல் வேண்டும்.
6. காய் துளைப்பானின் சேதம் பொருளாதார சேத நிலையை விட அதிகமிருப்பின் 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 1 லிட்டர் தண்ணீரில் புரோபனோபாஸ் 2.5 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் இமிடா குளோபிரைடு கலந்து தெளிக்கவும். வாடல்நோய், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் கார்பென்டசின் கரைத்து செடியின் வேர் பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும்.
7. மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத்திறன் கொண்ட வம்பன் 5, 6 ரகங்களைப் பயிரிடவும், நோய் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் இமிடாகுளோபிரைடு 0.4 மி.லி கலந்து தெளிக்கலாம்.அறுவடை:விதைத்த 150 முதல் 180 நாள்களில் பச்சைக் காய்கள் முதல் அறுவடைக்கு வரும் 55 முதல் 60 நாள்கள் சென்று மறுமுறை அறுவடை செய்யலாம். 210 நாள்களில் காய்ந்த காய்களை முதல் முறையும், 30 நாள்கள் சென்று மறுமுறையும் அறுவடை செய்யலாம்.
சேமிப்பு: அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சதவீத ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் 1 கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து சேமித்து வைக்கலாம்.
மகசூல்:பச்சைக் காய்கள் ஒரு செடிக்கு 1 முதல் 3 கிலோ, மணிகள் 1 ஹெக்டேருக்கு 2 ஆயிரம் கிலோ.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 27452371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

காக்க..காக்க... மண் வளம் காக்க....!
விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும் என நெல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும்.பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) பட்டியலில் தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளிஞ்சி, நரிப்பயிறு, கிளைரிசிடியா உள்ளிட்ட பயிர்கள் உள்ளன.இதில் சணப்பை பயிரிடுவது குறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலையத் தலைவர் அகிலா கூறியது:பயிர்களுக்கு உயிர் உரம் இடுவதில் முக்கியமானது சணப்பை. இந்தப் பயிர்கள் வேகமாக வளரக் கூடிய தழை, நார்ப்பயிர். தீவனப் பயிராகவும் வளர்க்கலாம்.நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரமாகும். சணப்பை இடும் முறைகள்: அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் விதை உற்பத்தி செய்யலாம். வண்டல் மண்ணுக்கு ஏற்றது. அனைத்து வகை மண்ணிலும் விதைக்கலாம்.ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ முதல் 35 கிலோ வரை பயிரிடலாம். விதை நேர்த்தி அவசியமில்லை. இடைவெளி 45 ல 20 சென்டி மீட்டர் என்ற அளவில் இட வேண்டும்.இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. பயிர் பாதுகாப்பு அவசியமும் இல்லை. 30 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்தால் போதுமானது. 45 நாள் முதல் 60 நாள்களுக்கும் அறுவடை செய்து மண்ணில் மக்க வைத்து உழவு செய்ய வேண்டும்.இதேபோல் ஒவ்வொரு அறுவடைக்கும் பசுந்தாள் உரங்களை முறையாக இட்டு பயிரிட்டால் விவசாயிகள் முழு பலன்களை அடையாலம் என்றார்.
Subscribe to:
Comments (Atom)