பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாதம் 24 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாகம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் கணிணி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு நகல், சம்மந்தப்பட்ட வட்டாச்சியரிடம் பெறப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், மின் இணைப்பு அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெற வேண்டும். ஒரு ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் பரப்பிற்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு தனியாக மின் இணைப்பு மற்றும் மோட்டார் வசதி இருக்க வேண்டும். தகுதி உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Monday, 9 March 2015
மண்ணைப் பொன்னாக்கும் தென்னை நார்க் கழிவு உரம்
அதிக சத்துகளுடன் கூடிய தென்னை நார்க் கழிவு உரம் மண்ணைப் பொன்னாக்கும் வரமாக விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.தென்னை நார்க் கழிவில் எளிதில் சிதைவடையாத லிக்னின், செல்லுலோஸ், கரிமம் ஆகியவை உள்ளன.தென்னை நார்க் கழிவு நிலத்தில் மக்கும்போது தழைச்சத்தின் அளவு குறைகிறது. ஆய்வுகளின் முடிவில் வீணடிக்கப்படும் தென்னைக் நார்க் கழிவை உயிரியல் முறையில் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்தைப் பயன்படுத்தி மக்க வைத்து ஊட்டமிகு எருவாக்குவதால் அதன் பயிர்ச் சத்து அளவு அதிகரிக்கப்படுகிறது.
தென்னை நார்க் கழிவை மக்க வைக்கும் முறை:தேவையான பொருள்கள்: தென்னை நார்க் கழிவு 1 டன். புளுரோட்டஸ் வித்து 5 பாட்டில்கள், யூரியா 5 கிலோ.செயல்முறைகள்: (முதல் அடுக்கு) நிழலடியில் 5க்கு 3 சதுர மீட்டர் சமதள பரப்பில் 100 கிலோ கழிவுகளை சீராகப் பரப்பி, நன்கு நீர்த் தெளிக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு பாட்டில் புளுரோட்டஸ் வித்தை சீராக தூவவும்.(இரண்டாவது அடுக்கு) அதன் மீது மீண்டும் 100 கிலோ கழிவை சமமாக பரப்பி நன்றாக நீர்த் தெளித்து ஒரு கிலோ யூரியாவை சீராகத் தூவ வேண்டும்.இவ்வாறு இரண்டு அடுக்குகளை மாற்றி மாற்றி ஒரு மீட்டர் உயரத்துக்கு சீராக அடுக்க வேண்டும்.அதை கணிசமான ஈரத்துடன் சேர்த்து மக்க வைக்க வேண்டும். சுமார் 30 முதல் 45 நாள்கள் வரை மக்க வைத்தால் நல்ல உரமாக மாறிவிடும்.
தென்னை நார்க் கழிவு பயன்கள்: ஒரு ஏக்கருக்கு 5 டன் தென்னை நார்க் கழிவை இடுவதால் கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன.களிப்பாங்கான மண்ணின் இறுக்கத் தன்மையைக் குறைத்து நீர் கடத்தும் திறனை அதிகரிக்கிறது.மணற்பாங்கான மண்ணிலும், மானாவரி நிலங்களிலும் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்குகிறது.களர் நிலங்களிலும் தோல் தொழிற்சாலைக் கழிவினால் பாதித்த நிலங்களிலும் உள்ள தீங்கை நீக்கி விளைச்சலை அதிகரிக்கிறது.ஊட்டச் சத்துக்கள் மிக்க இந்த எரு அனைத்து வகை நிலங்களிலும் மண்ணை வளமாக்கி விளைச்சலைக் கூட்ட வல்லது.கழிவுப் பொருள்களை மக்கச் செய்து எருவாக்குவதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.எனவே விவசாயிகள் மேற்கண்ட முறையில் தென்னை நார்க் கழிவு உரத்தை தயாரித்து தங்களது மண்ணைப் பொன்னாக்கலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Monday, 2 March 2015
சிவகங்கையில் மணக்கும் "சம்பங்கி பூ'
வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும். பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக "பட்டர்பிளை' சொட்டு நீர் பாசன கருவி பொருத்தியுள்ளேன். பூச்செடி நடவிற்கு உரம், இயற்கை உரம், சொட்டு நீர் கருவி பொருத்துதல் போன்றவற்றிற்கு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கிலோ வரை சம்பங்கி பூக்கள் விளையும். இவற்றை மதுரை மார்க்கெட்டில் விற்று வருகிறோம். பூக்களை மொட்டுகளாக மட்டுமே பறிக்க வேண்டும். மதுரை மார்க்கெட்டில் தற்போது சம்பங்கி பூ கிலோவிற்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்றால் தான், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சம்பங்கி பூக்கள் குறைந்த விலைக்கு விற்பதால் ஆண்டுக்கு ரூ.1.08 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். செடிகள், ஆட்கள் கூலி, பராமரிப்பு செலவு போக குறைந்த வருவாயே கிடைக்கும். முகூர்த்த காலங்களில் நல்ல விலை போனால் லாபம் கிடைக்கும், என்றார். ஆலோசனைக்கு 99766 50101.-என்.வெங்கடேசன், சிவகங்கை.
Subscribe to:
Comments (Atom)