பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாதம் 24 -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் பண்ணை நீர் மேலாண்மை திட்டம் மற்றும் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (பட்டியல்) வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் இதர வகுப்பு விவசாயிகளுக்கும் இணைய தளம் மூலம் பதிவு செய்து கொள்வதற்காக கால அவகாசம் இம்மாகம் 24-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் கணிணி சிட்டா, அடங்கல், நில வரைபடம், பாஸ்போட் அளவு புகைப்படம், ரேஷன் கார்டு நகல், சம்மந்தப்பட்ட வட்டாச்சியரிடம் பெறப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயி சான்றிதழ், மின் இணைப்பு அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அணுகி பயன்பெற வேண்டும். ஒரு ரேஷன் கார்டில் உள்ள நபர்களுக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டர் பரப்பிற்கு சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு தனியாக மின் இணைப்பு மற்றும் மோட்டார் வசதி இருக்க வேண்டும். தகுதி உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment