வெங்காயம் நட்டு... வெற்றிக்கொடி கட்டு..!
எம்.செந்தில்குமார்
உலக அளவில் அதிகம் வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்த இடம் இந்தியாவிற்குதான். மாறும் தட்பவெட்ப நிலை, காலம் மாறிப் பெய்யும் மழை ஆகியவற்றால் இந்தியாவில் வெங்காய உற்பத்தி சமீபகாலமாக குறைந்து வருகிறது. இதனால் வெங்காயத்தைப் பயிரிட்டு நஷ்டத்தைச் சந்தித்த விவசாயிகள் பலர் வேறு பயிர்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி 20 வருடங்களாக சின்ன வெங்காயத்தைச் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார் தேனி மாவட்டம் பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த வேல்ஆண்டவர். சின்ன வெங்காய சாகுபடி குறித்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் வேல் ஆண்டவர்:வெங்காய சாகுபடியில் இயற்கையின் ஒத்துழைப்பு அவசியம் என்றாலும் நாம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் மூலம் குறைந்த காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். பழைமையான நடைமுறைகளுடன் தற்காலத் தொழில்நுட்பங்களையும் இணைத்து பயன்படுத்தினால் வெங்காய சாகுபடியில் வெற்றி உறுதி. நடவு முறை மற்றும் மண்:வெங்காயத்தை நடவு செய்வதற்குமுன் நிலத்தை நன்றாக உழுது மண்ணை பொலபொலவென இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். உழுவதை ஏப்ரல், மே மாதங்களில் செய்து இரண்டு மாதங்களுக்கு நிலத்தை ஆற விடுவது நல்லது. மாட்டு எரு அல்லது ஆட்டுக்கிடை போட்டால் மண் வளம் பெருகும். சின்ன வெங்காயத்தை மேட்டுப்பாத்தி மற்றும் கிடைப்பாத்தி என இருவகையிலும் நடலாம். மேட்டுப்பாத்தி அமைத்தால் அதிக மழை பெய்தாலும் நிலத்தில் நீர் தங்காது. இதனால் வெங்காயச் செடிகள் அழுகுவது தவிர்க்கப்படும் என்பதால் நான் மேட்டுப்பாத்தியையே தேர்ந்தெடுத்தேன். நான்கு அடி அகலப் பாத்தியில் முக்கால் அடிக்கு ஒரு வரிசை என நான்கு வரிசைகளும், ஒவ்வொரு வரிசையிலும் 4 விரல்கள் பக்கவாட்டு இடைவெளியில் ஒரு நாற்று என நட வேண்டும்.பாத்திக்கு நடுவில் 12 ட்ட் அளவிலான சொட்டுநீர்ப் பாசனக் குழாயை அமைத்துள்ளேன்.நான் செம்மண்ணில் வெங்காயம் பயிரிட்டுள்ளேன். கரிசல் மண்ணிலும் வெங்காயம் நடலாம். வடிகால் வசதி மிகவும் முக்கியம். கரிசல் மண் நீரை அதிகம் ஈர்த்துக் கொள்ளும் என்பதால் கரிசல் மண்ணில் வெங்காயம் நடும்போது குறைந்த அளவே நீரைப் பாய்ச்ச வேண்டும்.தண்ணீர்:வெங்காயத்தில் நீர் மேலாண்மை மிகவும் முக்கியம்.செடிகளின் வேர் நனையும் அளவிற்கு தண்ணீர் அளித்தால் மட்டும் போதும். சில விவசாயிகள் அளவு தெரியாமல் தண்ணீர் பாய்ச்சுவதால், வெங்காயச் செடிகள் அழுகி நஷ்டத்தை சந்திக்கின்றனர். நான் சொட்டுநீர்ப் பாசனத்தைப் பயன்படுத்துவதால் இந்தப் பிரச்சினை வருவதில்லை.நாற்று நட்ட நாற்பது நாட்கள் வரை ஐந்து நாட்களுக்கு ஒருமுறையும், நாற்பது நாட்களுக்கு மேல் மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் விட வேண்டும்.அப்போதுதான் காய் பிடித்து, நல்ல நிறத்துடன் வெங்காயம் விளையும்.
காலம் மற்றும் விதைத் தேர்வு
:வெங்காய நடவுக்கு டிசம்பர், ஜனவரி மற்றும் ஜூன், ஜூலை ஆகியவை உகந்த காலமாக இருக்கும். தட்பவெட்பச் சூழல்களை ஆராய்ந்து நடவு காலத்தை அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.பொதுவாக காய் நடவு மற்றும் நாற்று நடவு என்ற இருவகைகள் வெங்காய நடவில் பின்பற்றப்படுகின்றன. நான் காய் நடவு முறையை பின்பற்றி வருகிறேன். காய் நடவு முறையில் வெங்காயம் 65 முதல் 75 நாட்களில் விளைச்சலுக்கு வரும். இந்த முறையில் ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். நல்ல விதைகள் பத்து கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விலையாகிறது. பொதுவாக பல விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வெங்காயத்தையே அடுத்த நடவிற்கு விதையாகப் பயன்படுத்திக் கொள்வர். வெளியில் விதை வாங்க விரும்பும் விவசாயிகள் நடுத்தர அளவிலான காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பழைய வெங்காயமாக இருக்க வேண்டும். நகத்தால் வெங்காயத்தின் அடிப்பகுதியைத் கீறினால் நீர்ச்சத்து குறைவாக இருக்க வேண்டும். நடவு முடிந்து 60 நாட்கள் ஆன வெங்காயம் விதைக்கு நல்லது.ஜூலை மாதத்தில் வெங்காயம் பயிரிட்டால் காய் நடவு முறையைப் பின்பற்றுவது நல்லது. டிசம்பர்,ஜனவரி கால நடவிற்கு கோ.ஆ. எண் 5 (covai onion no 5)என்ற ரகத்தைப் பயிரிடலாம்.இந்த ரகம் 100 முதல் 110 நாட்களில் விளைச்சலுக்குத் தயாராகும்
உரம் மற்றும் பூச்சிக்கொல்லி:
அடி உரம் டி.ஏ.பி. ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அளிக்க வேண்டும். மேட்டுப்பாத்தி அமைத்ததும் அடியுரத்தை அளித்துவிட வேண்டும். நாற்று நட்ட 15 நாட்களில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் சல்பர் கலந்த உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை அளிக்க வேண்டும். 30 நாட்களில் அதே போல் உரம் அளிக்க வேண்டும்.45-ஆவது நாளில் தழைச்சத்து,மணிச்சத்து,சாம்பல் சத்து, சல்பருடன் அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாஷ் தலா 25 கிலோ அளிக்க வேண்டும்.பூச்சிக்கொல்லியைப் பொறுத்தவரையில் வரும்முன் காப்பதே சிறந்தது. பல விவசாயிகள் பூச்சித் தாக்குதல் தொடங்கியவுடன் மருந்து அடிக்கலாம் என நினைக்கின்றனர். அது தவறு. இப்படிச் செய்தால் பூச்சித் தாக்குதலால் விளைச்சல் குறைவதோடு இரண்டாம் தர வெங்காயமே கிடைக்கும்.பச்சைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவை பொதுவாக வெங்காயத்தை தாக்கக் கூடிய பூச்சிகள். ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மருந்து கேனின் மூலம் எட்டு முறை அதாவது 80 லிட்டர் அளவிற்கு அடிக்க வேண்டும். ஒரு டேங்கிற்கு 20 கிராம் அசிபேட் மற்றும் 30 மி.லிட்டர் புரோனோபாஸ் என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை அடித்துவிட வேண்டும்.
சந்தை வாய்ப்புகள்:
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்கிறது. நேரத்திற்கு ஏற்றாற்போல் விலை அதிகரிக்கும். மழை பெய்யும் காலங்களில் வெங்காயத்திற்கு டிமாண்ட் அதிகரிக்கும். எனவே சரியான விலை கிடைக்கவில்லை என நினைக்கும் விவசாயிகள் ஸ்டாக் வைத்திருந்து விற்கலாம்.எனக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 8 டன் அளவிற்கு விளைச்சல் கிடைக்கிறது. ஒரு கிலோ தற்போது 15 ரூபாய் வரை விலை போகிறது. எனவே குறைந்தபட்சம் 60 நாட்களில் 70,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.டிப்ஸ்:வெங்காயத்திற்கு பராமரிப்புச் செலவு குறைவு, வேலையாட்கள் தேவையும் குறைவு. வெங்காயச் சாகுபடியில் முன்னெச்சரிக்கை உணர்வுடன் சரியான நேரத்தில் பூச்சிமருந்து அடித்து, தேவையான அளவு மட்டும் தண்ணீர் பாய்ச்சி பயிரைப் பாதுகாத்தால் குறைந்த நாட்களில் நல்ல லாபம் பார்க்க முடியும். இயற்கை ஒத்துழைத்தால் எதிர்பார்க்காத அளவு லாபம் அடையும் வாய்ப்பும் உள்ளது" என்கிறார்
.தொடர்புக்கு: 89399 90000 (இரவு 8 மணிக்கு மேல்)

No comments:
Post a Comment