‘‘மண்புழு உரம் உற்பத்தி செய்ய விரும்புகிறோம். இதற்கு மானியம் உண்டா?”
ஆர். முருகன், செம்மேடு.கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் செயல்பட்டு வரும் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் அலுவலர் முனைவர் பி. கமலாசனன் பிள்ளை பதில் சொல்கிறார்.‘‘இயற்கை விவசாயம்தான் இனி எதிர்காலம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆகையால், இயற்கை இடுப்பொருட்களை உற்பத்தி செய்ய, அரசும் ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக, மண்புழு உரம் உற்பத்தி செய்பவர்களுக்கு, காதி கிராமத் தொழில் ஆணையம் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் நேரடியாக வழங்கப்படுவதில்லை. வங்கிகள் மூலமே வழங்கப்படுகிறது. ஆண்களுக்கு, 25% மானியம், பெண்களுக்கு 30% மானியம் என்று வழங்கப்படுகிறது.500 கிலோ உற்பத்தித்திறன் கொண்ட மண்புழு உரக்கூடத்தை அமைக்க, சுமார் 4 லட்ச ரூபாய் செலவாகும். இதில் ஆண் களுக்கு ஒரு லட்சமும், பெண்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரமும் மானியமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுதவிர, மத்திய-மாநில அரசுகளும் அவ்வப்போது மண் புழு உர உற்பத்திக்கு மானியம் வழங்கி வருகின்றன.இந்த மானியங்களைப் பெற வேண்டும் என்றால், அடிப்படைத் தகுதிகள் அவசியம். சொந்தமான நிலம் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவராக, மண்புழு உர உற்பத்திப் பற்றி முறையாகப் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். கே.வி.கே என்று அழைக்கப்படும் வேளாண் அறிவியல் மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எங்கள் விவேகானந்தா கேந்திராவிலும், மண்புழு உர உற்பத்தி பற்றிய பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்குகிறோம். இந்தப் பயிற்சியில், மண்புழு உர உற்பத்தி நுட்பங்கள்... வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறும் வழிமுறைகள் பற்றி விரிவாகக் கற்றுக் கொடுக்கிறோம். விவசாயிகளின் விருப்பத்தின் அடிப்படையில், திட்ட அறிக்கையும்கூட தயார் செய்து கொடுக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மிகக்குறைந்த கட்டணமே நிர்ணயித்துள்ளோம்.”தொடர்புக்கு, விவேகானந்தா கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டம், கன்னியாகுமரி-629702. தொலைபேசி: 04652-246296, செல்போன்: 82200-22205.

No comments:
Post a Comment